டில்லி,
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தம் கொண்டுவர முயற்சி செய்கிறது.
இந்த புதிய வரைவு அமல்படுத்தப்பட்டால், தகவல் பெறும் உரிமை குறித்து மேல்முறையீடு செய்யும் விண்ணப்பதாரர்களின் செயலுக்கு கடும் தண்டனை வழங்கும் விதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2005ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு ஆட்சி யின்போது தகவல்பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது.
பின்னர் 2012ல் தகவல் பெறும் உரிமை விதிகள் குறித்து பணியாளர் மற்றும் பயிற்சி (DoPT) துறையால் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் கருத்து கேட்கப்பட்டன.
இதுகுறித்து, ஓய்வுபெற்ற தகவல் அறியும் உரிமை ஆர்வலர் லோகேஷ் பத்ரா கூறியதாவது,
இந்த சட்ட முன்வரைவில் விதிகளுக்கு பதிலாக இலக்காக முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து, அதிகாரப்பூர்வமாக எந்தவொரு பத்திரிகை வெளியீட்டிற்கும் அனுமதிக்க அளிக்க வில்லை. வலைதளத்தில் மட்டுமே பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கும்விதமாக அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கனவே தகவல் பெறும் விண்ணப்பதாரர்கள் கையால் மனு எழுதி கொடுத்தனர். தற்போது அது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தகவல் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய வரைவில், தகவல் பெறும் உரிமை விண்ணப்ப தாரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் விதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த சட்ட முன்வரைவு காரணமாக, திட்டம் மத்திய தகவல் ஆணையம் முன் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மேல் முறையீடு செய்பவர் குற்ற வழக்கில் தள்ளப்படும் வகையில் கட்டமைப்பு உள்ளது என்று கூறி உள்ளார்.
மேலும், ஒருசில சுயநலம் கொண்டவர்களால் தகவல் பெறும் உரிமை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எதிராக இந்த புதிய சட்ட வரைவு அமல்படுத்துவது. தேவையற்றது என பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.