சென்னை: பிரபல நடிகை சமந்தா உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு, தனக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய் பாதிப்பு பற்றியும், தான் விரைவில் குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக திரையுலகில் முன்னணி நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். சமந்தா ரூத் பிரபு எனப்படும் 35வயதாகும் சமந்தா,  தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது, யசோதா, சகுந்தலம், குஷி, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதனால், அவர்குறித்து தேவையற்ற வதந்திகள் உலா வந்தன. இந்த நிலையில், தற்போது தனக்கு என்ன நோய் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் மருத்துவமனையில் கையில் டிரிப் ஏற்றப்பட்டு  சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்துடன், தனது நோய் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு, மயோசிட்டில் எனப்படும் ஆட்டோஇம்யுனோ நோய் பாதிப்பு இருப்பதாகவும், இதில் இருந்து குணமடைய கொஞ்ச காலம் எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்து உள்ளர். அதாவது  தோல் சம்பந்தப்பட்ட myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.

நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு…. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்…. மேலும் ஒரு நாளை என்னால் கையாள முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. நான் குணமடைய இன்னும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்றுதான் அர்த்தம் என்று நினைக்கிறேன். ஐ லவ் யூ… இதுவும் கடந்து போகும்,” என்றும் சமந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.