திருவாரூர்: பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு” என திருவாரூரில் மக்கள் கிராம சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் வாக்குகளை பெறும் வகையில், திமுக மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து வருகிறது. அதன்படி, இந்த கிராமசபை கூட்டத்துக்கு திமுக தலைவர் நேரில் சென்று மக்களிடையே உரையாற்றி ஆதரவு கோரி வருகிறார்.
இந்த நிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே அவளிவணல்லூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வரும் ஸ்டாலின் அவர்கள் அண்மையில் மக்கள் மத்தியில் பேசிய போது தமிழகத்தில் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும், நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா என பொதுமக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும், நாங்கள் ரெடி என பதிலளித்தனர்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் தான் பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், 1988ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மகளிர் சுய உதவி குழு தலைவராக இருந்தபோது அனைவருக்கும் கடன் வழங்கும் திட்டம் நிறைவேற்றப் பட்டதாகவும், ஆண்களுக்கு சமமாக பெண்களும், பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்களும் இருக்கின்றனர், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு” எனவும் சுட்டிக்காட்டினார்.