Skip to content
  • Wed. Sep 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

பெண்கள் முன்னேறும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு! ஸ்டாலின்

Jan 4, 2021
திருவாரூர்: பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு” என திருவாரூரில் மக்கள் கிராம சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் வாக்குகளை பெறும் வகையில், திமுக மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து வருகிறது. அதன்படி, இந்த கிராமசபை கூட்டத்துக்கு திமுக தலைவர் நேரில் சென்று மக்களிடையே உரையாற்றி ஆதரவு கோரி வருகிறார்.
இந்த நிலையில், இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே அவளிவணல்லூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வரும் ஸ்டாலின் அவர்கள் அண்மையில் மக்கள் மத்தியில் பேசிய போது தமிழகத்தில் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும், நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா என பொதுமக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும், நாங்கள் ரெடி என பதிலளித்தனர்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  திமுக ஆட்சியில் தான் பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், 1988ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மகளிர் சுய உதவி குழு தலைவராக இருந்தபோது அனைவருக்கும் கடன் வழங்கும் திட்டம் நிறைவேற்றப் பட்டதாகவும், ஆண்களுக்கு சமமாக பெண்களும், பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்களும் இருக்கின்றனர், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு”  எனவும் சுட்டிக்காட்டினார்.

Post navigation

“ஆளுநரிடம் கொடுக்கும் இரண்டாம்கட்ட ஊழல் புகாரில் கு போக்குவரத்துத்துறை அமைச்சரின் முறைகேடுகள் அம்பலமாகும்! ஸ்டாலின்
மொழியின் பெயரை கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்! பதவி ஏற்பு விழாவில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி புகழாரம்…

Related Post

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

தமிழ் நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி

இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

உலகம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer