கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்

Must read

சென்னை:
மிழகத்தில் அதி தீவிர மழை எச்சரிக்கையை அடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது நாளை காலை புயலாக வலுப்பெறும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக பயணித்து அரபிக்கடலில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், நெல்லை – தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றின் கரைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாறு நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணை களையும் தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

More articles

Latest article