புதுடெல்லி:
மக்களவை தேர்தலோடு சேர்த்து காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி, தேசிய ஜனநாயக கட்சித் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான குலாம் ஹாசன் தலைமையிலான அரசியல்கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை தள்ளிப்போட முயற்சித்து வருவதாக அறிகிறோம். ஒமர் அப்துல்லாவை ஆட்சியிலிருந்து நீக்கியதிலிருந்து ஆளுநரின் செயல்பாடு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
தவிர்க்க முடியாத நிலையில் தான் ஆளுநர் ஆட்சி இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதே சிறந்தது. எனவே, மக்களவை தேர்தலோடு சேர்த்து காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்றனர்.
காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் குழு, கடந்த 4-ம் தேதி ஸ்ரீநகரில் ஆய்வு செய்தபோது இந்த கோரிக்கையை வைத்தனர்.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை கையாள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தான் முடியும் என்று அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோடிட்டு காட்டியுள்ளனர்.