சென்னை:  தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது.  இருந்தாலும் ஒரு வாரத்திற்கு லேசனா முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம்,  மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.  இது அடுத்த  24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், குறிப்பிட்டபடி, நகராமல் அந்த இடத்திலேயே தொடர்ந்து நிலை கொண்டது.

இதன் காரணமாக வட தமிழக மாவட்டங்கள், சென்னை மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.  நேற்று காலை முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில்,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும்,  . தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் சென்னை மற்றும்  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 31-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று முற்பகல்   சென்னை உள்பட 10 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.