சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தாலும், இன்று மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாட்களாக தமிழக மக்களை மிரட்டி வந்த, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவிழந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் -மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே நகரும். நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று மற்றும் 16, 18-ந்தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்திற்கு வரும் 17-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.