புதுச்சேரி:
மித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம் அடைந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவரை வரவேற்கின்றனர். அவரை வரவேற்க புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சாலையை மறைந்து வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு காரணமாக அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி செல்ல முடியாமல் சிக்கி கொண்டது. இதில் அலங்கார வளைவு சரிந்து விழுந்து, இதில் அருகிலிருந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி காயமடைந்தார்.