கத்தார் நாட்டுக்கு எழுந்துள்ள நெருக்கடிகள் இந்தியாவையும் மறைமுகமாக பாதிக்கும்.

நெட்டிசன்:

நம்பிக்கைராஜ் அவர்களின் முகநூல் பதிவு:

த்தாரில் ஏறக்குறைய 8 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு அவர்கள் மூலம் இந்தியாவிற்கு வரும் அந்நியச்செலாவணியும் குறையும்.

இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் 65% அளவிற்கு கத்தாரிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது.

கத்தாரின் டாப் ஏற்றுமதி நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கத்தாரின் டாப் இறக்குமதி நாடுகள் வரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

கத்தாரிலிருந்து இந்தியா அம்மோனியா, யூரியா, எதிலேன் மற்றும் புரோபிலேன் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது.

இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவுகளின் ஆண்டு மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

கத்தாருக்கு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்வது, மிஷின்கள் மற்றும் உபகரணங்கள், இரும்பு, பிளாஸ்டிக், கட்டுமான பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள், ரசாயனங்கள், ரப்பர், மசாலா பொருட்கள், மற்றும் பருப்பு வகைகள்.

கத்தாருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது. அதுதான் அங்கு பணிபுரியும் 8 லட்சம் இந்தியர்களை சார்ந்த குடும்பங்களுக்கும், இந்திய பொருளாதாரத்திற்கும் நல்லது.
English Summary
The crisis in Qatar, will affect India indirectly