அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கியால் சூட்டு 5 பேர் பலி

புளோரிடா:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாயினர்.

போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபரும் கொல்லப்பட்டார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோவின் கிழக்கு பகுதியில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டடி பட்டு மர்ம நபர் இறந்ததாக அந்நாட்டு ஊடங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவத்திற்கு தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இல்லை என்றும் தொழில் போட்டி காரணமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்லாண்டோ நகர நைட்கிளப்பில் கடந்த ஆண்டு ஜூன் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகினர். 53 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
5 persons killed in gun shot at america