எந்தத் தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப் போகிறார் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் தற்போது காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் ரேபரேலி தொகுதியை அவர் தக்க வைப்பார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் மேலிடமும் இதையேதான் விரும்புகிறது. இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் திருச்சூரில் தோல்வியடைந்த கருணாகரனின் மகன் கே. முரளீதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

மலப்புரம்: அரசியலமைப்புச் சட்டம் எங்கள் குரல், அதைத் தொடாதீர்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

18வது மக்களவைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, கேரளாவின் வயநாடு, உ.பி. ரேபரேலி  என இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டும்.  அதன்படி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி  இன்று காலை கேரளாவுக்கு வருகை தந்துள்ளார்.  கேரளாவின்  மலப்புரத்திலும், வயநாடு மாவட்டம் கல்பெட்டாவிலும் அவர் வாக்காளர்களை சந்தித்ததார். அதைத்தொடர்ந்து மலப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

வயநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசுகையில், “…இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு வரலாறும், பாரம்பரியமும் நமது அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்படுகிறது. இந்திய மக்களும் அப்படித்தான். அரசியலமைப்புச் சட்டம் எங்கள் குரல், அதைத் தொடாதீர்கள்” என்று பிரதமர்  மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசியவர்,  “கேரளா, உத்தரபிரதேசம் மற்றும் பிற அனைத்து மாநில மக்களுக்கும்,   இந்திய மக்களுக்கு என்ன வேண்டும் என்று  பிரதமர் மோடி ஆணையிட முடியாது என்று கூறியவர்,   “உண்மை என்னவென்றால், பிரதமர் வாரணாசியில் தப்பித்துவிட்டார், வாரணாசியில் அவர் தோற்கடிக்கப்பட்டிருப்பார். அயோத்தியில் பாஜக தோற்கடிக் கப்பட்டது. அயோத்தி மக்கள்  அவர்களுக்கு  ஒரு செய்தியை வழங்கியுள்ளனர் என்று கூறிய ராகுல்,  நாங்கள்  அவர்களின் வெறுப்பையும் வன்முறையையும் பாராட்டுகிறோம் என தெரிவித்தார்.

இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள  ராகுல் காந்தி எந்த தொகுதியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் தற்போது காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் ரேபரேலி தொகுதியை அவர் தக்க வைப்பார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் மேலிடமும் இதையேதான் விரும்புகிறது. இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் வயநாடு தொகுதியில்,  திருச்சூரில் தோல்வியடைந்த கருணாகரனின் மகன் கே. முரளீதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.