தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதிலுரை ஆற்றினர்.
முன்னதாக சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அன்படி, அயோத்திதாச பண்டிதர் அவர்களின் 175 வது ஆண்டு விழாவின் நினைவாக வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்கும், வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 -வது பிறந்தநாள் விழாவினையொட்டி சட்டப்பேரவையில் 14 அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.