டில்லி,

ச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 மூத்த நீதிபதிகளும் நேற்று முதல் வழக்கம் போல் தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அவர்களை அழைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறும்போதுழ, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 4 மூத்த நீதிபதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.

உச்ச நீதிமன்ற  மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா மீது  பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்திய பார்கவுன்சில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய பார் அசோசியன் தலைவர் மன்னன் மிஸ்ரே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதுபோல மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணு கோபாலும் அதை ஆமோதித்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் இடையேயான பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பிரச்னை முழுமையாக முடிவுக்கு வரும் எனவும் உச்சநீதிமன்ற அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.