ரஜினிகாந்தின் ‘காலா’ படத்துக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘காலா’ திரைப்படத்துக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜசேகர் என்பவர், ரஜினி நடிக்கும் ‘காலா’ என்ற திரைப்படத்தின் தலைப்பும், படத்தின் கதைக்கருவும் தன்னுடையது என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டே, ‘காலா’ என்ற படத்தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் தான் பதிவு செய்திருப்பதாகவும் ராஜசேகர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.