லண்டன்:
சமூக வலைதளங்களை மேம்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளின் முதல் பகுதியை இங்கிலாந்து தலைமை சர்ச் வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களால் உலகம் முழுவதும் நன்மையும் கிடைத்திருக்கிறது. தீமையும் தேடி வந்திருக்கிறது.
சமூக வலை தளங்களை தவறாகப் பயன்படுத்துவது போன்ற சைபர் குற்றங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
இதனை தடுக்க சரியான சட்டங்கள் எங்கும் கிடையாது. இதுவே சமூக வலைதளங்களின் பதிவோடுவோருக்கு எளிதாகப் போகிறது.
அடிப்படை தார்மீகம் பற்றிகூட கவலைப் படாமல், தனி நபர் தாக்குதல், புனையப்பட்ட செய்திகள், பெண்களை தவறாகப் பயன்படுத்துவது போன்ற செயல்கள் நடக்கின்றன.
இந்நிலையில், இதனை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் இங்கிலாந்தின் தலைமை சர்ச்சான ஆர்ச் பிஷப் ஆஃப் கேன்டர்பரி இறங்கியுள்ளது.
சமூக வலைதளங்களை மகிழ்ச்சியுடன் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இங்கிலாந்தின் தலைமை சர்ச் வகுத்துள்ளது.
இது தொடர்பாத முதல் பாகம் வெளியிடப்பட்டது.
இணையத்தை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கவும், தவறான பதிவை தவிர்ப்பதற்கும் இந்த வழிகாட்டு நெறிமுறை உதவும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இணையம் மகிழ்ச்சியான இடமாக மாறும் என்றும் இங்கிலாந்து தலைமை சர்ச் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஏராளமான கொண்டாட்டங்கள் இருந்தாலும், பாதமான அம்சங்களும் உள்ளன.
உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, மற்றவர்களையும் அப்படியே நடத்துங்கள் என்பதே இந்த வழிகாட்டு நெறிமுறையின் முக்கிய நோக்கம்.
ஒரு பதிவை போடும் முன்பு யோசியுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.