
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1.5 வயது குழந்தை, கொரோனா வைரஸ் தொற்றால், ஜூன் 28ம் தேதியான இன்று மரணமடைந்துள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம், தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் தாக்கி மரணித்த மிக இளம்வயது நபர் என்ற சோகமானப் பதிவு நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அக்குழந்தைக்கு, ஜூன் 27ம் தேதி, நுரையீரலில் உணவுத் துகள்கள் நுழைந்து நிலைமை மோசமானது. இந்நிலையில், அக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றும் உறுதியானது. இதனால், அக்குழந்தை மரணமடைந்தது.
இதனையடுத்து, அக்குழந்தைக்கு தொடர்புடைய சுமார் 50 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு இடைபட்ட மொத்தம் 4012 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]