புதுடெல்லி:
மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ராகுல்காந்தி இந்தியா கடுமையான மின் நெருக்கடியில் உள்ளதாகவும், பல மாநிலங்களில் 8 மணி நேர மின்வெட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்சார தேவை உச்சத்தை எட்டும்போது போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாதது வேதனைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மின் உற்பத்திக்கு 66.32 மில்லியன் டன்கள் நிலக்கரி தேவைப்படும் நிலையில் தற்போது 21.55 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.