டெல்லி; காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக்கூட்டம் டிசம்பர் 17-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல ஆண்டுகளாக நீட்டித்து வந்த கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வப்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மேலாண்மை ஆணையத்திற்கு சில ஆண்டுகளாக தலைவர் நியமிக்கப்படாத நிலையில், முழு நேர தலைவராக ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது தலைமையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற 17-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை, காவிரி தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெறும் விசாரணை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.