சென்னை,

மிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதால், அதை சமாளிக்க பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

மேலும்  தற்போதுள்ள நிதி நெருக்கடியில், பேருந்து கட்டணம் குறைப்புக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.

இன்று காலை அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில், முதல்வல், துணைமுதல்வர் உள்பட கட்சி நிர்வாகிகள் சூழ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாகளிடம் பேசியதாவது,

அரசு போக்குவரத்து கழகம் இந்த அளவுக்கு நஷ்டத்தில் இயங்க முக்கிய காரணமே திமுகதான் என்றும்,  கடந்த தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்தின் கடன் சுமையாக ரூ.3392.15 கோடியாக இருந்தது. மேலும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகை  ரூ.926 கோடியும் கொடுக்காமல் பாக்கி இருந்தது.

மேலும், திமுக ஆட்சியின்போதுதான், நிதிநிலைமை சமாளிக்க போக்குவரத்து கழகங்களின் சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டது என்றும் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 லிட்டர் டீசலின் விலை ரு.43 ரூபாய் 10 காசு என்றும்,. தற்போது டீசலின் விலை 67 ரூபாய் 23 காசு. அதாவது ஒரு லிட்டருக்கு 23 ரூபாய் 13 காசு உயர்ந்துள்ளது என்று கூறிய முதல்வர், கடந்த  6 ஆண்டுகளில் புதிய பஸ்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், அதேவேளை யில், பேருந்துகளின் உதிரி பாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக கடந்த  2011 மார்ச் மாதத்தில் ரூ.252.38 கோடி சம்பளமாக கொடுக்கப்ட்ட நிலையில், தற்போது, ம்பளமாக மட்டுமே  ரூ.492.16 கோடி வழங்கப்பட்டு வருகிறது என்றும், இதன் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு ரூ.240.15 கோடி கூடுதல் செலவாகிறது என்றார்.

போக்குவரத்து தொழிலாளர்களின்  சம்பளம் மட்டும் 90 சதவீதம் உயர்ந்திருக்கிற நிலையில், . தமிழகத்தில்தான் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது என்றும்,  இதன் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு மேலும், ரூ.545 கோடி இழப்பு ஏற்படுகிறது.

அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவாக உள்ளது. அதுபோல,   அண்டை மாநிலங்களில் குறைந்த அளவில்தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுவதாகவும்,  சம்பள உயர்வு, டீசல் விலை உயர்வு காரணமாக தவிர்க்க முடியாத நிலையில் தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் போக்குவரத்து கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி இழப்பு ஏற்படுகிறது என்ற முதலவர் தற்போதைய கட்டண உயர்வு காரணமாக .  இந்த இழப்பு ரூ.4 கோடியாக குறைந்துள்ளது என்றார்.

ஆனால்,  எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டங்களை நடத்தி வருகின்றன. தி.மு.க. திட்டமிட்டு இந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. போராட்டத்தை தூண்டி விடுகிறது.

ஏற்கனவே  சம்பள உயர்வு வேண்டும் என்று திமுக தொழிற்சங்கமான தொமுச தனது  தொழிலாளர்கள் மூலம் பிரச்சனையை தூண்டி விட்டார்கள். தற்போது,  பஸ் கட்டணம் உயர்வு என்று கூறி போராட்டம் செய்கிறார்கள் என்ற  முதல்வர், பேருந்து கட்டண உயர்வில் . தி.மு.க.வினருக்கு உண்மை நிலவரம் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.