
தர்மசாலா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பக்தர்களுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த பக்தர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அந்த பக்தர்கள், கங்கரா மாவட்டத்தில் உள்ள ஜவாலாஜி சன்னதிக்கு தனியார் பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த பக்தர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் அனைவரும் பஞ்சாப் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் என்பது தெரியவந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel