காமசூத்ரா புத்தகம் விற்காதே : பஜ்ரங்க் சேனா

த்தார்பூர்

ஜுராகோ கோயிலின் உள்ளே காமசூத்ரா புத்தகம் விற்கப்படுவதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் பஜ்ரங்க் சேனா சத்தார்பூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள கஜுராகோ கோயில் மிகவும் பழமையான கோயில்.   இதிலுள்ள சிற்பங்களும் மிகவும் அறிய கலைநுட்பத்துடனும்,  அதே நேரத்தில் காமரசம் அதிகமாகவும் செதுக்கப்பட்டிருக்கும்.   இதைக்காண உலகெங்கிலும் பல மக்கள் வருகின்றனர்.

அந்தக் கோயிலின் உள்ளே, காமசூத்ரா போன்ற புத்தகங்களும்,  அங்குள்ள சிற்பங்களில் காமரசம் அதிகம் உள்ள சிற்பங்களின் புகைப்படங்களும் விற்பனை செயப்படுவதாக பஜ்ரங்க் சேனா ஏற்கனவே பலமுறை ஊடகங்களில் தெரிவித்துள்ளது.  இது நமது பண்பாட்டுக்கு எதிரான செயல் என்றும், இதை தடை செய்ய வேண்டும் எனவும் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளது

இவைகள் கோயிலுக்குள் எங்கே விற்கப்படுகின்றன என்பதும், யார் விற்கிறார்கள் என்பதும் இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், சுற்றுலாத்துற அதிகாரிகளுக்கும் தெரியும் எனவும்,  ஆனால் அவர்களும் தடுப்பதில்லை எனவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.   அது ஒரு சிவன் கோயிலாததால் புனிதத்தன்மையை காக்க வேண்டும் எனவும் விற்பனையாளர்களுக்கு கடும் தண்டனை அளிக்கவேண்டும் எனவும் புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

 


English Summary
Bajrang Sena demands ban on sale of Kamasutra books at Khajuraho temple