புதுடெல்லி:
ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாமை அழிக்க பயன்படுத்த9ப்பட்ட குண்டுகளின் மதிப்பு ரூ.1.7 கோடி என தெரியவந்துள்ளது.

இந்திய விமானப்படை விமானங்கள் செவ்வாய்க் கிழமை காலை 3.30 மணி அளவில் பாகிஸ்தானின் எல்லையை கடந்து ஜெய்ஸி இ முகமது தீவிரவாத இயக்க முகாமை குண்டு வீசி அழித்தனர்.
இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பெரிய தீவிரவாத முகாமை அழிக்க அனுப்பப்பட்ட படையின் மதிப்பு விமானங்களை சேர்த்து ரூ. 2,568 கோடி.
ஒவ்வொரு 1,000 கிலோ குண்டு விலை ரூ.56 லட்சம். இந்த விமானப் படை தாக்குதலின் போது, எதிரிகளின் விமானம் வருகிறதா? என்பதை கண்காணிக்க, ரூ,1,750 கோடி மதிப்புள்ள கண்காணிப்பு விமானமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel