புல்வாமாவில் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் இந்த தாக்குதலுக்கு மிராஜ் 2000 ரக போர் விமானம் பயன்படுத்தப்பட்டது.

India

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவப்படையினர் கொல்லப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக கூறிய இந்தியா புல்வாமா தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் ரகசிய திட்டங்களை வகுத்து வந்தது. அதன்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படையை சேர்ந்த மிராஜ் 2000 ரக போர் விமானங்களை கொண்டு பாலிஸ்தானின் பாலகோட் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 1000 கிலோ குண்டுகளை கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு உள்ளிட்ட பல தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. தீவிரவாதிகளின் சொர்க்கம் என கூறப்பட்டு வந்த முகாம்கள் தகர்ப்பட்டதால் கிட்டத்தட்ட 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

iaf

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போர் விமானம் பற்றிய சில தகவல்கள்:

* மிராஜ் 2000 என்ற போர் விமானம் பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கியது. ஏனெனில், 1982ம் ஆண்டு பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து எஃப் 16 என்ற போர் விமானத்தை வாங்கியது. அதனை விட வலிமை இக்க விமானத்தை வாங்க திட்டமிட்ட இந்தியா மிராஜ் 2000 விமானத்திற்கான ஒப்பந்தத்தில் பிரான்சிடம் கையெழுத்திட்டது.

* அதன்பின்னர் இந்த விமானம் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது முக்கிய பங்கு வகித்தது. அன்றிலிருந்து இன்று வரை இந்த விமானமே மிகப்பெரிய போர் விமானமாக பார்க்கப்படுகிறது. இதற்கு இணையான ரபேல் போர் விமானங்களும் தற்போது வந்துள்ளன.

* சுமார் 59,000 அடி உயரம் வரை சென்று துல்லிய தாக்குதல் நடத்தும் திறன் படைத்த மிராஜ் 2000 விமானம் இந்தியா மட்டும் அல்லாமல் பிரான்ஸ், எகிப்து, பெரு, ஐக்கிய அரபு நாடுகள், கிரீஸ், தைவான், கத்தார் மற்றும பிரேசில் உள்ளிட்ட நாடுகளிடம் உள்ளது.