அரியலூர்:

பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட அரியலூர் மாவட்ட;த்தில், பாமகவினர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் திக்குமுக்காடி வரும் நிலையில்,  பாஜக தனது சித்து விளையாட்டை தொடங்கி உள்ளது. கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலைவீசி வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான குரு, பாமகவில் இணைந்த பிறகு, அரியலூர் மாவட்டமே பாமகவின் கோட்டை யானது.  இவருக்கு இவருக்கு மனைவி லதா, விருதாம்பிகை மற்றும் கனல் அரசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இதனை யடுத்து, மக்கள் தொகை அடிப்படையில் ஜாதி வாரி இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்தப் போராட்டம் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. இதன் காரணமாகவே  குரு ஒட்டுமொத்த வன்னியர்களின் பாதுகாவலராக உயர்ந்தார்.

ஆனால் குருவின் அசூர வளர்ச்சி பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘நுரையீரல் மற்றும் தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிப்பு நோயால்’  பாதிக்கப்பட்ட குரு  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட  குரு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். குரு உடல்நிலை குறித்து பாமக தலைமை அக்கறை கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் பல பாமக தலைவர்கள், ராமதாஸ் குடும்பத்தினர் மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில் , பாமகவினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி கட்சியில் அதிருப்தி ஏற்படுவதை தடுக்க வேண்டிய பாமக தலைமை, அதை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்தது.  குருவைப் போன்று, வன்னியர் மக்களிடையே அடிமட்ட அளவில் ஆதரவைப் பெற்ற குருவின் உதவியாளர் ஜி வைத்திலிங்கம் ஓரங்கட்டப்பட்டார்.

குருவுக்கு போட்டியாளர்களாக கருதப்பட்ட,  டி.எம்.டி திருமாவளவன் மற்றும்  சாமிதுரை ஆகியோருக்கு பதவிகள்  வழங்கி கவுரவித்தது பாமக தலைமை.

இதற்கு வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களை எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால், குரு ஆதர வாளர்கள் பலர் கட்சிப் பணியில் இருந்து அதிருப்தி காரணமாக விலகி இருந்தனர்.  மேலும், பாமகவின் திமுகவுக்கு எதிரான போக்கு பல  பாமக தொண்டர்களிடையே மேலும் அதிருப்தியை உருவாக்கியது.

தனது மகனுக்காக அவ்வப்போது கொள்கையை மாற்றி, அதிகார போதைக்காக கட்சி நடத்தி  வரும் பாமக தலைமைமீது பல வன்னிய இளைஞர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாமக தலைமைமீது அதிருப்தியில் இருப்பவர்களுக்கு தூண்டி போட்டு வருகிறது மாநில பாஜக. இந்த தூண்டிலில் சிக்கியவர்தான் வன்னியர் சங்கத்தில் பணியாற்றி, வன்னியர் இன மக்களிடையே நல்ல மதிப்பை உருவாக்கி வைத்திருந்த  அய்யப்பன்.

வன்னியர் சங்கத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கே ஐயப்பனுக்கு  மாவட்ட பாஜக தலைவர் பதவி கொடுத்து, பாமகவில் தனது ஆட்டத்தை ஆடத்தொடங்கியது பாஜக.

மாவட்டத்தில் உள்ள பாமகவினர் குறித்து நன்கு அறிந்திருந்த ஐயப்பன், பாமக தலைமையை விமர்சிக்கத் தொடங்கினார். இதனால் பலர் அவருக்கு ஆதரவாக பாஜகவில் இணைய, அவர்க ளுக்கும்   பதவிகளை வாரி வழங்கியது பாஜக மாநில தலைமை. இது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பல ஆண்டு காலம் பாமகவில் இருந்தபோது, அவர்களின் உழைப்புக்கு எந்தவித மரியாதையும்செய்யப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததால், தற்போது பாஜகவில் வழங்கப்பட்டுள்ள பதவிகள் அவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

இதனால் வன்னியர்களின் கோட்டையான அரியலூர் மாவட்டம் பல ஆண்டுகாலமாக பாமக கோட்டையாக திகழ்ந்து வந்த நிலையில், தற்போது, பாஜகவின் நடவடிக்கை காரணமாக ஆட்டம் காணத்தொடங்கி உள்ளது.

இதுகுறித்து கூறிய அரியலூர் மாவட்ட பாமக மூத்த நிர்வாகி ஒருவர்,  “குரு மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கும் வன்னியர்களுக்கும் பிணைப்பு சக்தியாக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, குருவை தங்கள் தலைவராகப் பார்த்து வளர்ந்த வன்னியர் இளைஞர்கள், வேறு யாரையும் தலைவராக ஏற்க மறுத்து வந்தனர். அதே வேளையில் மற்றொரு புறம், பாமக தலைமை  தொடர்ந்து திராவிடக் கட்சிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் வன்னியர்களிடையே வலியுறுத்தி வந்தது. இதனால், பலர் குழப்பமடைந்து மாற்றுக்கட்சிகளை  நோக்கி நகர்ந்தனர்.

இதன் விளைவாக, அரியலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் தற்போது பாஜக கால் பதித்துள்ளது. பல இடங்களில் பாஜக கொடி பறப்பதைக் காண்கின்றோம்..  மாவட்டத்தில் பாமகவின் கோட்டையாக திகழ்ந்த சென்டுரை  சுற்றியுள்ள பல கிராமங்களில், தற்போது பாமக தொண்டர் களின் எண்ணிக்கை  குறைந்தது பாதியளவுக்கு  பாஜகவுக்கு சென்றுவிட்டனர். பாமக மீது அதிருப்தியில் உள்ள தொண்டர்களை குறிவைத்தே பாஜக காய் நகர்த்தி வருகிறது  என்று வருத்ததுடன் தெரிவித்து உள்ளார்.

ஆனால் அதை மறுத்துள்ள  ஐயப்பன்,  கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள், பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.  எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்குச் சாவடியும் ஒரு கிளையாக உருவாக்கி  பணியாற்றி வருகிறோம். மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ளன. நாங்கள் இதுவரை சுமார் 580 சாவடிகளில் கிளைகளை உருவாக்கியுள்ளோம், மீதமுள்ளவை விரைவில் முடிக்கப்படும்.

தற்போதைய நிலையில், பாஜக மாவட்ட பிரிவில் தற்போது 27, 000 பேர்  உறுப்பினர்கள் உள்ளனர், மேலும் அதிகமானோர் சேர நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று  தெரிவித்து உள்ளார்.

மேலும், பாமகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தது குறித்த கூறியபோது, பாமக தலைமை மீதான அதிருப்தி என்றும், இதன் காரணமாக, வன்னியார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் எங்கள் கட்சியில் (பாஜக) சேர்கிறார்கள், ஏனெனில் அவர்கள் நரேந்திர மோடியை நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு நம்பிக்கைக்குரிய தலைவராக பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் பாஜகவின் கோட்டையாக மாற்றப்பட்டு வருவது குறித்து, கூறிய பாமகவின்  மாநில துணை பொதுச்செயலாளர் டி.எம்.டி திருமாவளவன் கூறுகையில், “அரியலூர் எப்போதும் எங்கள் தலைவர் ராமதாஸின் கோட்டையாகவே இருக்கும். எங்கள் கட்சியைச் சேர்ந்த அதிகமான பணியாளர்கள் தங்கள் கட்சியில் சேர்கிறார்கள் என்று பாஜக  பொய் சொல்கிறது.  அவர்கள் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் பி.எம்.கே. பி.எம்.கே.யின் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாட்டாளர் கூட பாஜக முகாமுக்கு  மாறவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும்,  ஐயப்பன் தனது கட்சி உயர் கட்டளையின் கவனத்தை ஈர்க்க இந்த வித்தைகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கலாம். எந்தவொரு பாஜக செயற்பாட்டாளரும் தங்கள் கட்சியில் பி.எம்.கே பணியாளர்களை சேர்க்கும் நோக்கத்துடன் ஒரு கிராமத்திற்குள் நுழைய முயன்றால், அவர்கள் எல்லையில் நிறுத்தப்படுவார்கள் என்பதை நாங்கள் காண்போம். அவர்கள் மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் நுழைய முடியாது என்று எச்சரித்துள்ளார்.

வன்னியர்களின் கோட்டையாக திகழ்ந்த அரியலூர் மாவட்டம், குருவை இழந்த பிறகு சரியான தலைமை இல்லாமல் தள்ளாடி வருகிறது. இந்த விஷயத்தில் பாமக தலைமையும் ஆர்வம் காட்டாத நிலையில், பாஜக உள்ளே புகுந்து வன்னியர் மக்களிடையே மூளைச் சலவையை உருவாக்கி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

வன்னியர்கள் மிகுந்த அரியலூர் மாவட்டம் பாமக கோட்டையாக இனிமேலும் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.