ஸ்ரீநிதி புரோடக்ஷன்ஸ் சார்பில் விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிக்க, மணிபாரதி இயக்கத்தில், ஸ்ரீகாந்த் – சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள படம் தி பெட்.

காவல்துறை அதிகாரியாக ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், பிளாக் பாண்டி, தேவிப்ரியா, திவ்யா உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான தி பெட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. நிகழ்வில் பேசிய ஸ்ரீகாந்த், “கொரோனா காரணமாக இன்று அனைவரும் வருவார்களா என நினைத்து பயந்தேன். தயாரிப்பாளரும், பி.ஆர்.ஓ. ஜானும்தான் நம்பிக்கை அளித்தனர். அவர்கள் கூறியபடியே அனைவரும் வந்திருக்கிறீ்கள். மிக்க மகிழ்ச்சி.

படத்தின் பெயரைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். சிம்பு தனது படங்களுக்கு துணிச்சலாக டைட்டில் வைப்பார். எனக்கு அவரைப்போல துணிச்சல் கிடையாது. சிம்புவின் தைரியத்தை பாராட்டுகிறேன்.

அவரை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஹாட்ஸ் ஆப் சிம்பு.

ஆனால் இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டியதில்லை. குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும்படியான படம்.

கட்டிலோட பாயிண்ட் ஆப் வியூவில், படம் நகர்கிறது. ஆகவே கட்டில் என்பதை ஆங்கிலத்தில் தி பெட் என வைத்துள்ளோம். அவ்வளவுதான்” என்று விளக்கம் கொடுத்தார் ஸ்ரீகாந்த்.

[youtube-feed feed=1]