டெல்லி: இந்திய அணியில் சச்சினுக்கு விரைவில் புதிய முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணியின் கேப்டன் விராட்கோலி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இதற்கு ஆதரவும், எதிர்ப்பு என விளையாட்டு ஜாம்பவான்கள் மட்டுமின்றி ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.
விராட்கோலியின் தலைமைப்பண்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, தற்போதுதென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கு கோலி கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு ரோகித் ஷர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது கோலிக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், சர்ச்சையாகியும் உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியை எப்படி அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வது என்பது தொடர்பான திட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி வெளியிட்டார். இதில் சச்சின் தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான கவாஸ்கர், கபில்தேவ் தலைமையிலான அணிக்கு பிறகு, சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமணன் போன்றோர் கள் இணைந்த அணி கிரிக்கெட் உலகை கலக்கி வந்தது. இவர்களில் கங்குலி பிசிசிஐ தலைவரான நிலையில், ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சி யாளராக பணியாற்றி வருகிறார். வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தார். ஆனால் சச்சின் தான் இதுவரை எந்த பெரிய பொறுப்பிலும் இல்லை.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, சச்சினுக்கு இந்திய அணியில் சச்சினுக்கு பெரியபொறுப்பு காத்து கொண்டு இருக்கிறது சச்சினின் பங்கை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து யோசித்து முடிவு எடுத்துள்ளேன். விரைவில் சச்சினின் பங்கையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்று பதில் அளித்துள்ளார்.
கங்குலியின் இந்த அறிவிப்பு சச்சின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.