பெங்களூரு,
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த டெஸ்ட் தொடர் வரும் 16ந்தேதி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது.
தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும், தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.
இதற்கிடையில், தோள்பட்டை காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தொடரில் விலகுவதாக அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது மிட்சல் ஸ்டார்க்-கும் விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா வின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க்-ஐ எங்கள் அணியின் கூர்மையான ஆயுதம் என்று மார்ஷ் பாராட்டியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் ஸ்டார்க்கும் விலகுவதாக அறிவித்துள்ளர். வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, அவர் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். சிகிச்சைகாக அவர் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார்.
இன்னும் இரண்டு தொடர் பாக்கி உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இரு முக்கிய வீரர்களின் விலகியிருப்பது ஆஸ்திரேலிய அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இரு முக்கிய வீரர்கள் வெளியேறி இருப்பது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
.உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவ்ர் மிட்சல் ஸ்டார்க் என்பது குறிப்பிடத்தக்கது.