The 25 deaths take the 2017 casualty count for security forces killed in Maoist attacks to 48

 

 

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் மீது மாவோயிஸ்டுகள் நடத்தியிருக்கும் தாக்குதல், கோழைத்தனமானதும், வருந்தத்தக்கதுமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அங்குள்ள நிலைமைய உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றிருந்த மாநிலத்தின் முதலைமச்சர் ராமன்சிங் சத்தீஸ்கருக்கு உடனடியாக திரும்பி உள்ளார்.

 

90க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை வீரர்கள் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 300 மாவோயிஸ்டுகள் திரண்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்தில் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதாக, தாக்குதலில் காயத்துடன் தப்பிய வீரர் ஒருவர் கூறியுள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 25 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

 

சத்தீஸ்கரில் இந்த ஆண்டில் மட்டுமே 49 பேர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு மட்டும் மத்திய இணையமைச்சர் மகேந்திர கர்மா உட்பட காங்கிரசைச் சேர்ந்த 25 தலைவர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

 

கடந்த மாதம் தற்போது சம்பவம் நிகழ்ந்துள்ள அதே சுக்மா மாவட்டத்தில், சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுவெடிகுண்டுகள், டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள், அம்புகள் போன்ற உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு சாதனங்களைக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட எண்ணிக்கை விவரம்:

2012 – 46

2013 – 44

2014 – 60

2015 – 48

2016 – 36

2017 – 48

கடந்த ஐந்தரை ஆண்டுகளில் சராசரியாக மாவோயிஸ்ட் தாக்குதலில் 47 பேர் பலியாகி உள்ளனர்.