சென்னை: சென்னையில் நள்ளிரவு கொட்டி தீர்த்த கனமழை, ‘மேக வெடிப்பால்’ உருவானது என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இந்த மேகவெடிப்பு நடப்பாண்டு முதன்முறையாக சென்னையில் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026 ஆகஸ்டு மாதம், சென்னைக்கு வரலாற்று சிறப்பு மிக்க மாதம் எனறு குறிப்பிட்டுள்ளதுடன், ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 3 மி.மீ முதல் அதிகபட்சமாக ரூ. 100 மிமீட்டர் வரை மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேக வெடிப்பு என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவானால், அதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் நேற்று சென்னையில் மேக வெடிப்பு போன்ற மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒரு மணி நேரத்தில் 16 செ.மீ கனமழை கொட்டியது. அதிகபட்சமாக மணலி பகுதியில் 27 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
இரவு 10.30 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் பெய்யத்தொடங்கிய மழை, சுமார் 2மணி வரை நேரம் கொட்டி தீர்த்தது. மேலும் தொடர்ந்து, அதிகாலை வரை விட்டு விட்டு பெய்தது. அதிகபட்சமாக மணலியில் 27.செமீ, கொரட்டூர் 18செ.மீ, கத்தியவாக்கம் 14செ.மீ, திருவொற்றியூரில் 13செ.மீ, விம்கோ நகரில் 26செ.மீ பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டு சென்னைக்கு முதல் மேக வெடிப்பு. பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீக்கு (10செ.மீ) மேல் மழை பெய்துள்ளது. தெற்கு சென்னையில் வடக்கு மற்றும் வடமேற்கு சென்னையில் நமக்குக் கிடைத்த தீவிர மழையைப் பெற இப்போது உங்கள் முறை என குறிப்பிட்டுள்ளார்.

அவரது மற்றொரு பதிவில்,
ஒரு மாதத்தில் 3 – 100 மிமீ மழைப்பொழிவுடன் சென்னைக்கு வரலாற்று சிறப்புமிக்க ஆகஸ்ட் மாதம்
=================
ஆகஸ்ட் 2025 சென்னைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாக மாறியுள்ளது. முதல் முறையாக, ஒரே மாதத்தில் மூன்று 100+ மிமீ நிகழ்வுகளை நகரம் பதிவு செய்துள்ளது (ஆகஸ்ட் 22, 23 மற்றும் 31 ஆகிய தேதிகளில்). இதுபோன்ற ஒரு தொடர்ச்சி நகர வரலாற்றில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.
🌧️ ஆகஸ்ட் 31 மழை – வட சென்னையில் ஒரு மேக வெடிப்பு
——————————-
காலை 8.30 மணி வரை 24 மணி நேர ரேடார் மழைப்பொழிவு குவிப்பு மற்றும் பதிவான மழைப்பொழிவு வட சென்னையில் மழையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. அது “வானத்திலிருந்து வரும் நீர்வீழ்ச்சிகள்” போல் உணர்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
🔎 மேக வெடிப்பு அல்லது இல்லையா? – ஆம், அது தகுதியானது.
——————————
IMD-யின் வரையறையின்படி, மேக வெடிப்பு என்பது ஒரு சிறிய பகுதியில் (20–30 சதுர கி.மீ) ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு ஆகும். ரேடார் தரவு மற்றும் நிலைய பதிவுகள் வட சென்னையின் சில பகுதிகள் இந்த வரம்பை விட அதிகமாகப் பெற்றதை உறுதிப்படுத்துகின்றன, இது ஒரு உன்னதமான மேக வெடிப்பு நிகழ்வாக அமைகிறது.
📊 மழைப்பொழிவு முரண்பாடு
————
சென்னையின் ஆகஸ்ட் மாத இயல்பானது: 140 மிமீ. நுங்கம்பாக்கம் (நகர நிலையம்) இந்த மாதம் 200 மிமீயைத் தாண்டியுள்ளது. இந்த மாதம் சென்னையின் மழை வரலாற்றில் மிகவும் விதிவிலக்கான ஆகஸ்ட் மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும்.
சென்னையில் இன்றும் மழை தொடரும்
அடுத்த ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டால் பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழல் நிலவும். அதேசமயம் மாலை, இரவு, நள்ளிரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இன்று இரவும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் நேற்று பெய்தது போல மேக வெடிப்பு சம்பவம் போல இருக்காது. கனமழை பெய்வதற்கான சூழல் அதிகமிருக்கிறது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகலில் வெயிலும், இரவு நேரத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
டெல்டா வெதர்மேன் கனமழை எச்சரிக்கை
சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் நேற்று மிகக் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. மணலியில் மேகவெடிப்பு போன்று மழை பெய்திருப்பது கவனிக்கத்தக்கது. இங்கு ஒட்டுமொத்த மழைப்பொழிவு என்பது 27 செ.மீ, கொரட்டூரில் 18 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது என்றும், வரும் வாரத்தில் இப்படிப்பட்ட நிலை தான் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
