பெங்களூரு: நாளை மறுநாள் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் போட்டியிடுகின்றன. வெற்றி கோப்பையை தட்டிச்செல்வது யார் என்பது ஓரிரு மாதங்களில் தெரிய வரும். ஒரு கோப்பைக்காக மல்லுகட்டும் 10 அணிகள்!
உலகம் முழுவதுரும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 19வது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 28ந்தேதி) தொடங்குகிறது.

பிசிசிஐ-யால் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடருக்கு என்று மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த ஆண்டின் முதல் போட்டி ஆட்டம் தொடங்குகிறது
. ஆர்சிபி அணி நடப்பு சாம்பியன் என்பதால் அவர்களின் சொந்த மைதானத்தில் இந்த சீசனின் முதல் போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் அந்த அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஆர்சிபி எதிர்கொள்கிறது. இதற்காக சின்னசாமி மைதானத்தில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு மின்னல் வேகத்தில் விற்றுவிட்டது.
ஐபிஎல் அணிகள் விவரம்:
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- மும்பை இந்தியன்ஸ்
- சன்ரைசர்ஸ் ஹைதரபாத்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- குஜராத் டைட்டன்ஸ்
- பஞ்சாப் கிங்ஸ்
- டெல்லி கேபிடல்ஸ்
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
- ராஜஸ்தான் ராயல்ஸ்
10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது. இந்த 10 அணிகளுக்காகவும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும், வெளிநாட்டின் பிரபலமான வீரர்களும் ஆடுகின்றனர். இவர்களது ரசிகர்கள் இவர்களை ஊக்குவிப்பதற்காக மைதானங்களில் குவிந்து ஆர்ப்பரிப்பதும் வழக்கமான ஒன்றாகும்.
டெல்லி (டெல்லி கேபிட்டல்ஸ்), கொல்கத்தா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), லக்னௌ (லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ்), சென்னை (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஆமதாபாத் (குஜராத் டைட்டன்ஸ்), ஹைதராபாத் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), மும்பை (மும்பை இந்தியன்ஸ்) ஆகிய 7 நகரங்களில் அந்தந்த அணிகளின் 7 ஹோம் ஆட்டங்களும் (லீக் சுற்று) நடைபெகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூர் (4 போட்டிகள்) மற்றும் கௌஹாத்தி (3 போட்டிகள்) என இரு இடங்களில் தங்கள் ஹோம் ஆட்டங்களை விளையாடுகிறது. நியூ சண்டிகர் (4 போட்டிகள்) மற்றும் தரம்சாலா (3 போட்டிகள்) ஆகிய ஊர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் ஆட்டங்கள் நடைபெறும். தங்களின் 5 ஹோம் ஆட்டங்களை பெங்களூருவில் விளையாடும் ஆர்சிபி, 2 ஹோம் ஆட்டங்களை ராய்ப்பூரில் விளையாடுகிறது.
இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடக்கும். அதன்பிறகு பிளே ஆஃப் சுற்றில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் 7 போட்டிகளில் தங்கள் ஹோம் கிரவுண்டிலும், மற்ற 7 போட்டிகளை எதிரணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஆடுவார்கள்.

போட்டிக்கான முதற்கட்ட அட்டவணை:
பல்லாயிரக்கான கோடி வர்த்தகம் நடைபெறும் ஐபிஎல் தொடர் நடப்பாண்டில் 5 மாநில தேர்தல் தேதி காரணமாக முதல் பாதி அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தொடங்கும் இந்த ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை முதற்கட்ட அட்டவணைப்படி நடக்கிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் தேர்தல் நடப்பதாலும், வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெறுவதாலும் அதற்கேற்ப அடுத்தகட்ட போட்டி அட்டவணைகள் தயார்படுத்தப்பட உள்ளது.
மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, பாண்ட்யா, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் போன்ற மிகப்பெரிய நட்சத்திர வீரர்களும், ஜேக்கப் பெத்தேல், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், ஷிவம் துபே, ரியான் பராக், சாம்சன் போன்ற நட்சத்திரங்களும் ஆடுவதால் இந்த தொடர் மிகுந்த விறுவிறுப்பானதாக அமையும். அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களும், திறமையான இளம் வீரர்களும் இணைந்து ஆடுவதால் சீனியர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கும்.
கடந்த முறை ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மைதானத்திலும் ரசிகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி-யின் சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், அந்த ரசிகர்களுக்காக 11 இருக்கைகள் எப்போதும் காலியாக விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும். பெரும்பாலான போட்டிகள் இரவு 7.30 மணிக்கு நடைபெறும். சில போட்டிகள் மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. சென்னை அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் வரும் 30ம் தேதி மோதுகிறது.

முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை:
- மார்ச் 28 – இரவு 7.30 மணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பெங்களூரு
- மார்ச் 29 – இரவு 7.30 மணி – மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை
- மார்ச் 30 – இரவு 7.30 மணி – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – கவுஹாத்தி
- மார்ச் 31 – இரவு 7.30 மணி – பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – நியூ சண்டிகர்
- ஏப்ரல் 1 – இரவு 7.30 மணி – லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் – லக்னௌ
- ஏப்ரல் 2 – இரவு 7.30 மணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா
- ஏப்ரல் 3 – இரவு 7.30 மணி – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை
- ஏப்ரல் 4 – மாலை 3.30 மணி – டெல்லி கேபிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – டெல்லி
- ஏப்ரல் 4 – இரவு 7.30 மணி – குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் – ஆமதாபாத்
- ஏப்ரல் 5 – மாலை 3.30 மணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் – ஹைதராபாத்
- ஏப்ரல் 5 – இரவு 7.30 மணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு
- ஏப்ரல் 6 – இரவு 7.30 மணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா
- ஏப்ரல் 7 – இரவு 7.30 மணி – ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – கவுஹாத்தி
- ஏப்ரல் 8 – இரவு 7.30 மணி – டெல்லி கேபிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி
- ஏப்ரல் 9 – இரவு 7.30 மணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் – கொல்கத்தா
- ஏப்ரல் 10 – இரவு 7.30 மணி – ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கவுஹாத்தி
- ஏப்ரல் 11 – மாலை 3.30 மணி – பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – நியூ சண்டிகர்
- ஏப்ரல் 11 – இரவு 7.30 மணி – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை
- ஏப்ரல் 12 – இரவு 3.30 மணி – லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – லக்னௌ
- ஏப்ரல் 12 – இரவு 7.30 மணி – மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை
இந்த முதல் கட்ட அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2 ஹோம் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன அவை ஏப்ரல் 3 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
ஏப்ரல் 3 – இரவு 7.30 மணி – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை
ஏப்ரல் 11 – இரவு 7.30 மணி – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை
அதுபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியூரில் ஆடும் போட்டிகள் எவை?
மார்ச் 30 – இரவு 7.30 மணி – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – கௌஹாத்தி
ஏப்ரல் 5 – இரவு 7.30 மணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு
[youtube-feed feed=1]