டில்லி:

டப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

இது தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சித்தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி காரணமாக தீர்ப்பு தள்ளிப்போகிறதா என்ற சந்தேகமும் கட்சியினரிடையே நிலவி வருகிறது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் இன இரு அணிகாக சிதறியது. அதைத் தொடர்ந்து ஆட்சி அமைத்த எடப்பாடி தலைமையிலான  அரசு சட்டமன்றத்தில்  நம்பிக்கை வாக்கு கோரிய போது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல் ஏக்கள் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.

ஆனால், சில மாதங்களில் இரு அணியினரும் ஒன்றாக இணைந்ததை தொடர்ந்து, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வருக்கு எதிராக கவர்னரிடம்  கடிதம் கொடுத்தனர். அவர்களை அதிமுக கொறடாவின் வலியுறுத்திலின் பேரில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதை எதித்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழகிக்ல, 18 பேரும் தகுதி நீக்கம் செய்தது சரி என கூறியதுடன் சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று தெரிவித்து விட்டது. அதன் காரணமாக தற்போது அந்த  18 இடங்களும் இன்னும் காலியாக உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,  திமுக மற்றும் டிடிவி தரப்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்து விட்டது. ஆனால் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

விரைவில்  தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதி மன்றத்திலும் வலியுறுத்தப் பட்டு உள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு வெளியிவது தள்ளிப்போய்க்கொண்டே வருகிறது.

முதன்முறையாக இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜனவரி 17ந்தேதி வழங்கப்படலாம் என உச்சநீதி மன்ற விசாரணை பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால், அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட வில்லை.

அதைத்தொடர்ந்து, 31-01-2019  விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்று பட்டியலிடப்படவில்லை. இதுகுறித்து இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். அதையடுத்து 4-2-19 மற்றும் 11-2-19ந்தேதியும் பட்டியலிடப்பட்டது. பின்னர்  15-02-19 அன்று பட்டியலிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.  இதன் காரணமாக நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதுவும்  பொய்த்து போனது.

ஒவ்வொரு முறையும் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி உச்சநீதி மன்ற விசாரணை பட்டியலில் இடம் பெறுவதும், பின்னர் நீக்கப்படுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்புக்கும், பாஜக அதிமுக கூட்டணிக்கும் தொடர்பு இருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த தீர்ப்பு ஆட்சியாளர்களுக்கு எதிராக கூறப்படும் பட்சத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு இருக்கிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை பொறுத்தே அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

உச்சநீதி மன்ற தீர்ப்பை  திமுக நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தீர்ப்பு கூறப்படும் தேதிதான் தள்ளிப்போய்க்கொண்டே போகிறது….  இதில் என்ன மர்மம் உள்ளது என்பதுதான் தெரியவில்லை.