
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் வாங்கியிருந்தார்.
இத்திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் எனும் டைட்டிலுடன் உருவாகிறது. கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத ப்ரவீன் ஆண்டணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இத்திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடம் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தர்ஷனுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். கேரக்டரில் லாஸ்லியா நடிக்கிறார். இன்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
[youtube-feed feed=1]Pictures from #GoogleKuttappan pooja. pic.twitter.com/3vcdVW54tC
— UV Communications (@UVCommunication) January 28, 2021