டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமை பதவிக்கு போட்டியிட விரும்பும் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், கேரள மாநில காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை திடீரென சந்தித்து பேசினார். இது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த இரு ஆண்டுகளாக தலைவர் இல்லாத நிலையில், சோனியாகாந்தியே இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார். இதற்கிடையில், தற்போதைய தலைமைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதில் ஒருவராக குஜலாம் நபி ஆசாத் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்து உள்ளார்.
இதற்கிடையில், கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், அக்டோபர் 17-ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தலைமை பதவிக்கு பலர் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், காந்தி குடும்பத்தை சேர்ந்தவரே தலைவராக வேண்டும் என ஒரு தரப்பு வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி உள்ளது. அவர்கள், ராகுல் அல்லது பிரியங்கா போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தலைமை பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் யார், யார் என்பது குறித்த பட்டியலை வெளியிட வேண்டும் என தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்சி சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே தலைமை பதவிக்கான போட்டியில் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட் முன்னணியில் இருந்து வருகின்றனர்.. மேலும் சசிதரூர். உள்பட பலர் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பதவி வருகின்றன. இந்த நிலையில், அசோக் கெலாட் சசிதரூர் திடீரென சந்தித்து பேசியிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அசோக் கெலாட் கடந்தவாரம்தான், ராகுல் காந்தி கட்சி தலைமை ஏற்பதற்கு கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவர்கள் தலைமை பதவிக்கான களத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கெலாட்டும் சசிதரும் சுமார் அரை மணி நேரம் தனியாக ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.