தஞ்சை: தஞ்சை அருகே பலகோடி மதிப்பிலான 300கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில், அந்த கஞ்சா இலங்கைக்கு கடந்த இருந்தது தெரிய வந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே முடக்கிக்காடு என்ற இடத்தில் லாரியில் கடத்திச் சென்றுகொண்டிருந்த 300 கிலோ கஞ்சா காவல்துறையினரால் மடக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருமை நிலையில், அதை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பல பகுதிகளில் மற்றும் சாலைகளிலும் திடீர் திடீரென வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே முடக்கிக்காடு பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், அந்த பகுதியில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியில் கஞ்சா கடத்தி வந்ததது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், கஞ்சா கடத்திச் சென்ற லாரியில் பின்னால் வந்த காரில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த கஞ்சா இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த சோதனையின்போது சுமார் 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.