மும்பை: ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிற்பி கணேசன் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். இன்றைய யாத்திரையின்போது அவரது உடலுக்கு ராகுல்காந்தி மவுன அஞ்சலி செலுத்தினார்.
ராகுல்காந்தியின் பார்த் ஜோடோ யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், ராகுலுடன் தொடர்ந்து யாத்திரையில் பங்கேற்று வரும் தஞ்சாவூர் பகுதியைச்சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிற்பி கணேசன் என்பவர், மகாராஷ்டிரா நாந்தேட் பகுதியில் இரவு 1 மணி அளவில் அகால மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அmவரது இரங்கல் செய்தியில், எங்களின் சக யாத்ரி சிற்பி கணேசனின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கணேசன் எங்களது யாத்திரையின் அன்பு தோழர். உறுதியான மற்றும் உண்மையான காங்கிரஸ் தொண்டர். அவர் 3 தசாப்தங்களாக, ஒவ்வாரு யாத்திரையிலும் பங்கேற்று வருகிறார். இன்று நாங்கள் உண்மையான ஒரு தொண்டரை இழந்துள்ளோம்.
அவரது மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பருங்கும் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், அவர் நாட்டுக்காகவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கண்டவர், காங்கிரஸ் கட்சி உத்வேகமாக செயல்படும் நாம் அனைவரும் நம் நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துஉள்ளார்.
சிற்பி கணேசனின் மறைவுக்கு இன்றைய யாத்திரையின்போது ராகுல்காந்தி மற்றும் அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிற்பி கணேசன் மறைவுக்கு குறித்து டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர், அவரை உடலை தஞ்சாவூருக்கு கொண்டு வர அனைத்து பணிகளையும் செய்யப்பட்டு வருவதாகவும், மகாராஷ்டிரா மாநிலம் நாதேட்யில் இருந்து தெலுங்கானா மாநில தலை நகர் வந்து தஞ்சை வர தொலுங்காணா காங்கிரஸ் தலைவர் ரேவத் ரெட்டியிடம் பேசியுள்ளேன் என்று தெரிவித்துள்ள தாகூர், திரு கணேசன் அவர்கள் திருமணம் செய்யாமல் காங்கிரஸ் இயக்கத்திற்காக உழைத்தவர் . அவருக்கு வீரவணக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.