சென்னை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்தார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் மதிமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிரது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வந்து சந்தித்தார். அப்போது மு க ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வேல் முருகன் வாழ்த்தினார்.

அப்போது வேல்முருகன் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமது தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.