சென்னை
தமிழக அரசின் பட்ஜெட்டை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பாராட்டியதற்கு தமிழக நிதி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் வலைதளத்தில்,
”இந்திய ஒன்றியத்தின் முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான, ப. சிதம்பரம் அவர்கள், தமிழக அரசின் பட்ஜெட் 2025 – 2026 குறித்துப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதமாகக் குறைத்துள்ளதனையும், வருவாய் பற்றாக்குறையை 41,635 கோடியாகக் குறைத்ததையும் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளார்.
ஒரு அரசின் முதலீட்டு அளவை பொறுத்தே வளர்ச்சி இருக்கும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு தனது முதலீட்டு அளவை 22.4 சதவீதம் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சிறப்பாக வாழ்த்தி உள்ளார். ப.சிதம்பரம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
என்று பதிவிட்டுள்ளார்.