சென்னை:
முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், உடல்நலக்குறைவால் காலமானார்.

உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவை தங்கம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை தங்கம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2021ஆம் ஆண்டில் திமுகவில் கோவை தங்கம் இணைந்தார்.