நடிகர் விஜய் ரசிகர்கள் கடந்த சில மாதங்க ளாகவே ஏமாற்றத்தில் உள்ளனர். மாஸ்டர் படம் ஏப்ரல் மாதமே வரும் என்று எதிர்பார்த்து மே மாதமும் கடந்து ஜூன் 22ம் தேதி அதாவது விஜய் பிறந்தா நாளில் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு நீடிப்பால் தியேட்டர்கள் இன்னும் திறக்காத நிலையில் பிறந்த நாளில் இப்படம் வெளியாகாது என்பது தெரிய வந்துள்ளது.

மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் மாஸ்டர் பட ஹீரோ தளபதி விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்க்கள் எண்ணினர். அதுவும் ஏமாற்றத்தில் முடிந் திருக்கிறது.
பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடினால் அதில் ரசிகர் அதிகம் திரள்வார்கள். அப்போது கொரோனா தொற்று பரவ வாயப்புள்ளது என்பதால் ஜூன் 22ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் தெரிவித்திருக்கிறாராம்.
இதையடுத்து விஜய் மக்கள் இயக்க பொறுப் பாளர் புஸ்சி மன்றத்தினர் அனைவருக்கும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி தெரிவித்திக்ருகிறாராம்.