தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.
ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. ‘தளபதி 64’ படத்தை ரூ.32 கோடிக்கு சன் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி செல்லவுள்ளனர்.டெல்லியில் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற உள்ளதாம்.