பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் படத்தின் தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63 .

இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் அவர், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், அதில் மகன் கேரக்டரின் பெயர் பிகில் என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர் விஜயின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் 22-ம் தேதி நள்ளிரவிலும் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.