விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. போஸ்டரை பார்த்தவர்கள் அரவிந்த்சாமி அப்படியே எம்.ஜி.ஆர். போன்றே இருக்கிறார் என்று பாராட்டினார்கள்.

இந்நிலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி என் புது லுக் டிசம்பர் 24ம் தேதி காலை வெளியாகும் என்று அரவிந்த்சாமி ட்வீட் செய்தார். அதன்படி புதிய லக் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இது குறித்து அரவிந்த் சாமி அவரது பதிவில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ஆக ஒரு மணிநேரம் நடித்தது வெறும் கவுரவம் மட்டும் அல்ல பெரிய பொறுப்பு.

என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. தலைவரின் நினைவில் இந்த புகைப்படங்களை இன்று வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

 

[youtube-feed feed=1]