வான்மதி, வாலி, வில்லன்,வரலாறு, விவேகம், வேதாளம், விஸ்வாசம், வீரம் என V செண்டிமெண்ட் மீது அதீத நம்பிக்கை கொண்ட அஜித்தின் புதிய படத்திற்கு வலிமை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் 60வது திரைப்படத்தின் தலைப்பை நேற்று போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 2, நேர்கொண்ட பார்வை என தொடர் வெற்றி படங்களை தந்த ஹெச்.வினோத் அஜித்தின் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு வலிமை என பெயரிட்டு அதற்கான பூஜையும் நேற்று நடைபெற்றுள்ளது.
இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக களமிறங்கும் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பில்லா 2, மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, மீண்டும் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்த அனிகா இப்படத்தில் மீண்டும் அஜித் உடன் நடிக்கிறார்.

தெறிக்கவிடும் வசனங்கள் கொண்டு தொடர் வெற்றி படங்களை அளித்து வந்த ஹெச். வினோத், இப்படத்திலும் அதுபோன்ற வசனங்களை கொடுத்து, வலிமை திரைப்படத்தை வலிமையாகவே கொடுப்பார் என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
[youtube-feed feed=1]