பரோடா: குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம் தண்டேவாடா தாலுகாவில் உள்ள 12 கிராமங்களில் வாழும் தக்கோர் சமூகத்தினர், கலப்புத் திருமணம் மற்றும் திருமணமாகாத பெண்கள் மொபைல் ஃபோன் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது.

அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர், குறிப்பாக பெண்கள் கலப்புத் திருமணம் செய்யும் நிகழ்வு சமீபகாலங்களில் அதிகரித்திருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, கலப்புத் திருமணம் புரிந்த குடும்பத்தினருக்கு அபராதம் விதிக்கப்படும். தக்கோர் பெண்கள் பிற சமூக ஆணை திருமணம் செய்தால், அக்குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் அபராதமும், தக்கோர் சமூக ஆண், பிற சமூக பெண்ணை திருமணம் செய்தால், அக்குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

ஜுலை 14ம் தேதி, 800 தக்கோர் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், 9 அம்சங்கள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்தீர்மானத்திற்கு சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் கட்டுப்பட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.