ம்மு

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு நகரில் பிச்சை எடுக்கத் தடை விதிக்கப்பட உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு இரு தலைநகரங்கள் உண்டு. அவை ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகும். ஜம்மு நகர் சுற்றுலா தலம் என்பதால் பல பிச்சைக்காரர்கள் அங்கு வசித்து வருகின்றனர். அத்துடன் இவர்களில் பலர் தேச விரோதிகள் எனவும் பிச்சைகாரர் வேடத்தில் பதுங்கி உள்ளதாகவும் அரசுக்கு பல புகார்கள் வந்துள்ளன.

இதை தடுக்க காஷ்மீர் மாநில அரசு ஆலோசனை செய்து வந்தது. அதையொட்டி ஜம்மு நகர நீதிபதி ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்மீர் மாநில பிச்சை தடுப்பு சட்டம் 1960 இன் படி ஜம்மு நகரில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது பிச்சை எடுத்தவர்கள் பலர் சட்ட விரோத மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன.

எனவே பாதுகாப்பு நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு போன்ற புகழ்பெற்ற நகரங்களில் பிச்சை எடுப்பது மாநில மாண்பைக் குறைக்கும் செயலாகும். இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி மாநில மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.