சென்னை:

தைப்பூசம் தினமான இன்று சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

தை மாதத்தின் பூச நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி திதியும் இணைந்த நாள் தைப்பூசம் ஆகும. இன்றைய நாள் முருகன் வழிபாட்டிற்கு தைப்பூசம் உகந்த நாள். இன்றைய தினம் விரதம் இருந்து சுப்ரமணிய புஜங்கம், சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் வளம் சேரும்.

பக்தர்கள் சுப்ரமணிய புஜங்கம், சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் வளம் பெறலாம்…

தைப்பூசம் விழாவையொட்டி சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். அவர்களுக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பக்தர்கள் எடுத்து வரும் பால் குடம் அதாவது பாலை இந்த தொட்டியில் ஊற்றிவைக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள தொட்டியில் ஊற்றப்படும் பால்,   மின் மோட்டார் மூலம் கருவறையில் உள்ள முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் இடத்திற்கு போய்ச்சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. முருகனை வழிபடுவதற்காக  அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் வடபழனியில் திரண்டிருந்தனர். பால்காவடி ஏந்தி வந்த பெண்கள் முருகனுக்கு வழிபாடு செய்தனர். இதன் காரணமாக வடபழனி பகுதியில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.