சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்து.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. பெண்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் கோயிலாக இந்தக் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தைப்பூசம், யுகாதி, தமிழ் புத்தாண்டு, சித்திரை பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, மார்ச் 3 அடிகளாரின் பிறந்தநாள் ஆகியவை முக்கிய விழாக்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தைமாதம் நடைபெறும், தைப்பூசம் திருவிழாவையொட்டி பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருவார்கள். மேலும் பல லட்சம் பேர் இருமுடி கட்டியும் வருவார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், . இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“ஜனவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை லோக்மான்ய திலக் டெர்மினஸ் – காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11017),
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12635),
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12637),
ஜனவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01ஆம் தேதி வரை கன்னியாகுமரி ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12641),
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 29-ந்தேதி வரை மதுரை ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12651) மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் – மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16179),
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை கன்னியாகுமரி – பனாரஸ் செல்லும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16367),
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16865), டிசம்பர் 31 ஆம் தேதி 2025 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ஜோத்பூர் -திருச்சி செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20481).
ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ராமேசுவரம் – பிரோஸ்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20497) மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை செங்கோட்டை சென்னை எழும்பூர் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20682),
டிசம்பர் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வரை செங்கோட்டை- தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20684),
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை தாம்பரம் -நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20691),
ஜனவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01 ஆம் தேதி வரை புவனேஸ்வர் ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20849),
ஜனவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை புவனேஸ்வர் புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20851) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை லோகமான்ய திலக் டெர்மினஸ் மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22101),
டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை புதுச்சேரி – புதுடெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22403),
டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை ராமேசுவரம் -பனாரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22535),
டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01ஆம் தேதி வரை ராமேஸ்வரம் – அயோத்தி கான்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22613),
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22623) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை மதுரை பிகானேர் அனுவ்ரத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22631),
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை தாம்பரம் நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22657).
ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை ஜோத்பூர் மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22673),
ஜனவரி 1ஆம் தேதி முதல் பிபரவரி 2 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22153), மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறாக மொத்தம் 29 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வழியாக இயக்கப்படுடதம 57 ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வைகை எக்ஸ்பிரஸ்:
சென்னை எழும்பூர் – மதுரை (வண்டி எண்.12635),
மதுரையில் – எழும்பூர் (12636)
பாண்டியன் எக்ஸ்பிரஸ்:
சென்னை எழும்பூர் – மதுரை (12637),
மதுரை – எழும்பூர் (12638)
பொதிகை எக்ஸ்பிரஸ்:
எழும்பூர்-செங்கோட்டை (12661),
செங்கோட்டை-எழும்பூர் (12662)
உழவன் எக்ஸ்பிரஸ்
எழும்பூர்-தஞ்சாவூர் (16865),
தஞ்சாவூர்-எழும்பூர் (16866)
அந்யோதியா எக்ஸ்பிரஸ்
தாம்பரம்-நாகர்கோவில் (20691),
நாகர்கோவில்-தாம்பரம் (20692)
எக்ஸ்பிரஸ் ரயில்
எழும்பூரில் இருந்து திருச்சி (12653),
திருச்சியில் இருந்து எழும்பூர் (12654)
எழும்பூர்-கொல்லம் (16101),
கொல்லம்-எழும்பூர் (16102)
மொத்தம் 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]