மதுரை:  பழனி முருகன் கோவில் தைப்பூசம் திருவிழாவையொட்டி,  திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா  மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கானோர் பழனியில் குவிவார்கள்.  தைப்பூசத்தையொட்டி, பழனியில், இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றறப்பட்து. தொடர்ந்து வருகிற 31-ந்தேதி 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

தைப்பூசம் திருவிழாவையொட்டி,  திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களின்  வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை  350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என  மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் முருகேசன் தெரிவித்தார்.

 

[youtube-feed feed=1]