பழனி:
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருவார்கள்.
இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பழனிக்கு முருகப்பெருமானைத் தரிசனம் செய்ய வருவார்கள். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான தைப்பூச திருவிழா பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் அன்று பெரிய நாயகி அம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, முத்துக்குமார் சுவாமி வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரங்கள் நடைபெறும்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை தந்த பள்ளத்தில் முத்துக்குமார சுவாமி வீதி உலா வந்து அருள் பாலிப்பார். தொடர்ந்து வீதி உலா பூஜை அலங்காரங்களுடன் நடைபெறும். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று தெப்பத் தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.